ஒன்று ரெண்டு மூன்று நாலு
வசந்தன் பதிந்திருந்த பாடல் இது. ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் பொருட்டு இங்கே இட்டு வைக்கிறேன்.
ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.
ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.
உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
-------------------------------------------
மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும்.
ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.
ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.
உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே
நன்றி வசந்தன்!
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
posted by சுந்தரவடிவேல் at 12/16/2005 04:05:00 PM 4 comments


4 Comments:
இதைத்தான் எங்க ஊரில்
"எக் தோ தீன் ச்சார் பாஞ்ச் சே சாத் ஆட்
னவ் தஸ் க்யார பாரா தேரா"ன்னு பாடுவாமாக்கும்.
பாடலில் இலக்கங்கள் வரும்போது அவற்றைத் தடிப்பாக்கிப் போட்டால் நன்று, எனது பதிவிற் செய்தது போல.
அருமை,
உங்கள் வலைப்பூவின் சுட்டியை பேரண்ட்ஸ் கிளப்பில் கொடுக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி தேவை.
http://parentsclub08.blogspot.com/
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment
<< Home