கத்தரி வெருளி
நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே
ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.
வேண்டுகோள்:
இந்தப்பாடலில் விவரித்திருக்கும் வெருளியை யாரேனும் வரைந்து தந்தால் நன்றாகவிருக்கும்.
வெருளி செய்வதெப்படி? - http://www.powen.freeserve.co.uk/kids/scarecrow/scarecrow.htm
posted by மதி கந்தசாமி (Mathy Kandasamy) at 3/07/2005 11:02:00 AM 17 comments

17 Comments:
எள்ளு விதைப்போமான்னு கேட்டா எண்ணெயோட வந்து நிக்கிறீங்களே:)
மதி பயனான செயல். சந்திரவதனா வைத்திருக்கும் சிறுவர் ஓவியப்பதிவுக்கும் ஓர் இணைப்பினைக் கொடுத்துவிடுங்களேன்.
Mathy!!!
Kalakkal effort...
Aanalum inthap paatai potathukkaaga..(Grrrr.)
Ramani,
I couldnt find any. :(
Can u give me the link Ramani? All i could find was http://kulanthaikal.blogspot.com/
Chandravathana,
if you read this, could u pls give me the link.
மதி தேடிப்பார்த்தேன்; காணவில்லை; சந்திரவதனாவிடமிருந்து இல்லாதுவிடில், சுவிஸ்லாந்திலிருந்து வந்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். பார்த்துச் சொல்கிறேன்.
கூடவே, ஓரளவுக்குச் சம்பந்தமுள்ளதாக,
துளிர்
http://thuzhir.blogspot.com/2005/02/blog-post.html
//ஏழைக் கமக்காரன்// இது எப்படி சுந்தரின் பாட்டில் என்று யோசித்தபடி வந்தால் அதை எழுதியது மதி.
நல்ல பாடல். நன்றி.
பதிவு கலக்கல்!
நேத்துத்தான் சொல்லிக்கிட்டு இருந்தீங்க, இப்ப அதுக்குள்ள ஒரு வலைப்பதிவா?!! படுவேகம் போங்க :)
பயனுள்ள வேலை
பெயரிலி சொல்வது நளாயினி தாமரைச்செல்வன் அவர்களுடைய குழந்தைகள் பதிவென்று நினைக்கிறேன்
http://childrenworld.blogspot.com
பாடல்களை படிக்க ஆசையாக இருக்கிறது!பயனுள்ள முயற்சி!
இந்த சஜஷன் சொல்றதெல்லாம் எனக்கே பிடிக்காதுதான். இருந்தாலும்..
மேல இருக்கற கார்ட்டூன் படங்களுக்குப் பதில் நம்மூர் விக்கிரமாதித்த வேதாளம், காக்கா வடை தேட்டினது இந்த ரேஞ்சுல இருந்தா பக்கம் இன்னும் ஹோம்லியா இருக்கும்.
பதிவுக்குப் பதிவு கூட ஏதாவது சம்பந்தப்பட்ட படத்தோட போடறதுதான் சிறப்பா இருக்கும். படம் இல்லாத குழந்தைகள் உலகம் கிடையவே கிடையாது.
ஈழநாதன் பிடித்தார்; அதேதான்.
மிக அருமையான முயற்சி இந்த வலைப்பதிவு.
வாழத்துக்கள் மதி. இவ்வளவு வேகமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை.
This post has been removed by a blog administrator.
அருமையான பாடல்.
Please visit tamilkids.tripod.com
Post a Comment
Links to this post:
<\$BlogItemBacklinkCreate\$>
<< Home